செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டுள்ளார்.187 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளனர். மேலும், இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித் ஆகியோருக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்துகொண்டுள்ளார். இதை ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Enroute to attend the opening ceremony of the #chessolympiad #carfie with appa ! pic.twitter.com/P1BEpNaTso
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) July 28, 2022
