பல்லாவரத்தில் கஞ்சா விற்ற இளைஞர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கஞ்சா விற்பனை
பல்லாவரம் சந்தை பகுதியில் கஞ்சா பொட்டலங்களை விற்பதாக பல்லாவரம் காவல்நிலைய ஆய்வாளர் தயாளுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பெயரில் தனிப்படையினர் கஞ்சா விற்பனை ஈடுபட்ட சம்பத் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவரிடம் இருந்து 2 கிலோ 800 கிராம் கஞ்சா கைப்பற்றினர். இதனை தொடர்ந்து சம்பத்தை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பின்னர் சிறையில் அடித்தனர்.

