திருச்சி ரைபிள் கிளப் பகுதியில் ரசிகர்களின் தொல்லையால் அவரசமாக சென்னை திரும்பினார் நடிகர் அஜித்.
துப்பாக்கி சுடும் போட்டி
திருச்சி ரைஃபிள் கிளப் சார்பில் மாநில அளவிலான 47வது துப்பாக்கி சுடும் போட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே. நகரில் கடந்த 26ம் தேதி துவங்கியது. இதில் பங்கேற்க நடிகர் அஜித் குமார் நேற்று திடீரென்று திருச்சி திருச்சி ரைஃபிள் கிளப் சென்றார். அங்கு 50 மீட்டர் மற்றும் 20மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்துகொண்டார். இதனையடுத்து 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்வதாக இருந்தார்.
இதனிடையே அஜித்தின் வருகையை தெரிந்த ரசிகர்கள் ரைபிள் கிளப் முன்பு திரண்டனர். இதனால் நடிகர் அஜித் இன்றைய போட்டியில் பங்கேற்காமல் நேற்றிரவு திடீரென்று சென்னை சென்னை திரும்பிவிட்டதாக கூறப்படுகிறது.

