ஜம்மு – காஷ்மீர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக ராஜேஷ் செக்ரியை நியமிப்பதற்கான உத்தரவில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்.
திரவுபதி முர்மு
இந்திய நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு கடந்த 25ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், திரவுபதி முர்மு தனது முதல் கையெழுத்தை நீதித்துறை நியமன ஒப்புதல் அளித்தார். ஜம்மு – காஷ்மீர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக ராஜேஷ் செக்ரியை நியமிப்பதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். ஜனாதிபதி முர்மு கையெழுத்திட்ட முதல் நியமன உத்தரவு இது என்று அரசு வட்டாரங்களில் தகவல் தெரிவிகின்றனர். மேலும், இதுகுறித்து நீதித்துறை கூடுதல் செயலாளர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘இந்திய அரசியலமைப்பின் 224வது (1) மூலம் வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக ராஜேஷ் செக்ரியை ஜனாதிபதி நியமித்துள்ளார்’ என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உச்சநீதிமன்றம் மற்றும் நாட்டில் உள்ள மற்ற 25 நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனத்திற்கான உத்தரவுகளில் கோப்புகளில் ஜனாதிபதி கையெழுத்திட உள்ளார்.

