பிரபல நடிகரும், இயக்குநருமான ஜிஎம் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல நடிகர்
1986ம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான அறுவடை நாள் என்ற படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஜி.எம் குமார். அதனைத்தொடந்து உருவம், இரும்பு பூக்கள் ஆகிய படங்களை இயக்கினார். இதனையடுத்து கேப்டன் மகள் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். மேலும், குருவி அவன் இவன், வேலையில்லா பட்டதாரி, கர்ணன் என்று தொடந்து பல படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில், நடிகர் ஜி எம் குமார் உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

