அமைச்சரின் வாகனம் மீது செருப்பு வீசியவர்களை கண்டித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் கடிதம்
ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த சென்ற தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் நேற்று காலணியை வீசினர். இந்நிலையில், இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தேசிய கொடி பொருத்தப்பட்ட அமைச்சரின் வாகனம் மீது செருப்பு வீசி சுதந்திர விழாவின் மகத்துவத்தை இழிவுபடுத்தி இருக்கின்றனர். அமைச்சரின் வாகனம் மீது செருப்பு வீசி தேசிய கொடியை அவமதித்தவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் உங்கள் மதவெறி அரசியல் எடுபடாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

