அதிமுக ‘நமது அம்மா’ நாளிதழின் வெளியீட்டார் சந்திரசேகர் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமான வரித்துறை ரெய்டு
கோவை வடவள்ளியில் உள்ள அவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் சேதனை நடத்தி வருகின்றனர். இதேபோல, சந்திரசேகரின் தந்தை வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்திரசேகர், பல்வேறு தொழில்களையும், கட்டுமான தொழில்களையும் செய்து வருகிறார், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரசேகரின் மனைவி சர்மிளா கோவை மாநகராட்சி 38-வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகின்றார். ஆலயம் டிரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளையும் நடத்தி வருகின்றார். சந்திரசேகர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருவது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

