செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வேட்டி, சட்டையுடன் காட்சியளித்தார்.
பிரதமர் மோடி
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் திரைத்துறையை சேர்ந்த ரஜினிகாந்த், கார்த்தி, விக்னேஷ் சிவன், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் தமிழக அரசின் அழைப்பை ஏற்று பங்கேற்றுள்ளனர். மேலும், இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தந்துள்ளார்.
இன்று மாலை 5 மணியளவில் சென்னை வந்தடைந்த மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையார் விமான தளத்துக்கு சென்றுள்ளார் பின்னர் அங்கிருந்து கார் மூலம் நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வந்தடைந்தார். இந்த தொடக்க விழாவில் பாரம்பரை உடையான வேட்டி, சட்டையுடன் காட்சியளித்தார்.

