44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்று இன்று தொடங்குகிறது. இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா களமிறங்குகிறார்.
முதல் சுற்று
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து போட்டியின் முதல் சுற்று இன்று மதியம் 3 மணியளவில் தொடங்குகிறது. இந்தியா சார்பில் ஓபன் பிரிவில் 3 அணிகளும், மகளிர் பிரிவில் 3 அணிகளும் என்று மொத்தம் 6 அணிகள் களமிறங்குகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற்றுவருவதால் அரங்கை சுற்றி மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல் சுற்றான இன்று இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா ஓபன் பி அணி, ஐக்கிய அரபு அமீரக அணியுடன் களமிறங்குகிறார்.

