நாவல் பழமானது பல்வேறு ஆரோக்கியம் நிறைந்த பழம் ஆகும். இதில் ஏராளமான சத்துக்களும் மற்றும் ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளன.
நாவல் பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள் :
இந்த பழத்தில் ப்ரோடீன், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி, ப்ருக்டோஸ் , க்ளுக்கோஸ், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

இப்பொழுது நாம் நாவல் பழம் உண்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி காண்போம்.
இரத்த சர்க்கரையின் அளவை குறைக்கும் :
நாவல் பழம் ஆன்டி-டையாபடீக் பண்புகள் நிறைந்த பழம். இதனை தினமும் உண்டு வரும்போது உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும். மேலும் உங்களுக்கு சர்க்கரை நோய் வராமல் காக்கின்றது.நாவல் பழம் மற்றும் அதன் விதைகளானது ஸ்டார்ச் சர்க்கரையாக மாறுவதைக் கட்டுப்படுத்தும்.

மேலும் யுனானி மருத்துவ முறையில் நீரிழிவிற்கு இந்த பழத்தின் விதையைத் தான் முதன்மையாக பயன்படுத்துகின்றனர். எனவே இதன் விதையை பொடி செய்து, அதனை நீரில் கலந்து குடிக்கலாம். இல்லாவிட்டால், நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு குடித்து வரலாம்
அதிக அளவு நார்ச்சத்து :
நாவல் பழத்தில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது.இது நம் உடலுக்கு பலவித நன்மைகள் அளிக்க கூடிய ஒன்று ஆகும். எனவே நாவல் பழத்தினை உங்கள் உணவில் சேர்த்து வாருங்கள் நண்பர்களே.
இரத்த உற்பத்தியினை அதிகரிக்கும் :
நாவல் பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உங்கள் உடலில் இரத்த உற்பத்தியினை அதிகரிக்கும் மற்றும் உங்களுக்கு இரத்த சோகை நோய் வராமல் காக்க உதவுகின்றது.
வைட்டமின் சி நிறைந்துள்ளது :
நாவல் பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. வைட்டமின் சி உங்கள் சரும ஆரோக்கியத்திற்கு மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு மிக மிக முக்கியமான ஒன்று ஆகும்.

மேலும் மூட்டுக்களில் உள்ள ஜவ்வு மற்றும் தசை நார்களின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் சி மிக மிக முக்கியம்.
எலும்புகளின் வலிமையினை அதிகரிக்கும் :
நாவல் பழத்தில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. உங்கள் உணவுகளில் உள்ள கால்சியம் சத்தினை உறிஞ்சுவதற்கு மெக்னீசியம் மிகவும் உதவியாக இருக்கும். எனவே எலும்புகளின் வலிமையினை அதிகரிக்க தினமும் நாவல் பழத்தினை உண்டு வாருங்கள்.
இரத்த சோகை நோய் வராமல் காக்கும் :
நாவல் பழத்தில் அதிக அளவு இரும்புசத்து நிறைந்துள்ளது. இதனை அடிக்கடி உண்டு வந்தால் இரத்த சோகை நோய் ஏற்படாமல் காக்க உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் :
நாவல் பழத்தில் வைட்டமின் சி மற்றும் பலவித வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

இதனை தினமும் உட்கொண்டு வந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும். மேலும் உடலில் எந்தவிதமான நோயும் வராமல் காக்க உதவும்.
புற்று நோயினை தடுக்க உதவும் :
நாவல் பழத்தில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளது. இது புற்றுநோய் வராமல் காக்க உதவுகின்றது.
தினமும் நாவல் பழம் உண்பவர்களுக்கு 30 சதவீதம் புற்றுநோய் ஏற்படுவது குறைவு என பலவித ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வளவு நன்மைகள் நாவல் பழத்தில் உள்ளதால் அதனை தினமும் உண்டு வாருங்கள்.
கல்லீரல் பிரச்சினைகள் :
நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்குவதுடன், சிறுநீர்ப்பை பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
வயிற்றுப்போக்கு :
வயிற்றுப்போக்கினால் அவஸ்தைப்படுபவர்கள், நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு, அதில் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

குறிப்பு :
நாவல் பழங்களை வெறும் வயிற்றில் எடுத்து வர வேண்டாம்.
நாவல் பழங்களை சாப்பிட்ட உடனே பால் குடிக்க வேண்டாம்.
முக்கியமாக நாவல் பழங்களை அளவுக்கு அதிகமாக எடுக்க வேண்டாம். இல்லாவிட்டால், அவை உடல் வலி மற்றும் காய்ச்சலுக்கு வழிவகுக்கும்.

