சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படம் தொடர்பான முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
புதிய அப்டேட்
கவுதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடித்து வரும் படம் வெந்து தணிந்தது காடு. இதில் சிம்புவுக்கு ஜோடியாக சிதி இத்னானி நடித்துள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் ஐசரி கணேஷ் தயாரித்து இருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து சிம்பு, கவுதம் மேனன் மற்றும் ஏ.ஆர். ரகுமான் மூன்றாவது முறையாக இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள்.
வெந்து தணிந்தது காடு செப்டம்பர் 15ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெறும் ஐந்து நிமிட சண்டைக் காட்சி ஒன்று சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

