ஊராட்சி மன்ற தலைவர் படுகொலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஊராட்சி தலைவர் படுகொலை
கிருஷ்ணகிரி தளி பகுதி அருகே தாளவேந்திரம் ஊராட்சியின் தலைவராக இருப்பவர் மூர்த்தி. இவர் நேற்று முன் தினம் இரவு, படுகொலை செய்யப்பட்டுள்ளார். சமூக விரோதிகளின் கோழைத்தனமான செயல் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தப் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய, இதற்கு துணை போன அனைவரையும் கைது செய்து, சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பி விடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரை வலியுறுத்துகிறேன். மேலும், உயிரிழந்த ஊராட்சி தலைவர் மூர்த்தியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

