ஆவின் நிறுவனம் மூலம் குடிநீர் பாட்டில் தயாரிக்கும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக மைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
தண்ணீர் பாட்டில்
அதிமுக ஆட்சியில் அரசு போக்குவரத்து கழகம் மூலம் அம்மா குடிநீர் பாட்டில் தயாரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல் ஆவின் நிறுவனம் மூலம் குடிநீர் பாட்டில் தயாரித்து விற்பனை செய்ய தற்போதைய திமுக அரசு திட்டமிட்டு இருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் 28 இடங்களில் ஆவின் பால் யூனிட் உள்ளது. அங்கு வாட்டர் பிளாண்ட் இருப்பதால் குடிநீர் பாட்டில் தயாரிக்கும் திட்டம் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், தற்போது அதற்கான வாட்டர் பாட்டில் மற்றும் லேபிள் ஆகியவையின் வடிவமைப்புககள் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

