ஒரு டன் கரும்புக்கு குறைந்தபட்சம் 4,500 ரூபாய் கொள்முதல் விலையாக வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவர் ராமதாஸ்
இது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் 2022 ஆண்டில் ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலை 2,821 ரூபாய் என்று மத்திய அரசு நிர்ணயம் செய்திருக்கிறது. கடந்த ஆண்டின் விலையான 2,755 ரூபாய் உடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டில் டன்னுக்கு 66 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கிறது. ஒரு டன் கரும்புக்கு குறைந்தபட்சம் 4,500 ரூபாய் விலை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில், அதில் மூன்றில் இரு பங்குக்கும் குறைவான கொள்முதல் விலையை மத்திய அரசு நிர்ணயித்திருப்பது நியமன ஒன்றல்ல. தமிழகத்தில் கரும்பு கொள்முதல் விலை கடந்த 6 ஆண்டுகளில் 266 ரூபாய் மட்டுமே, கரும்புக்கான உற்பத்திச் செலவை கணக்கிடும் முறையை மத்திய அரசும், ஊக்கத்தொகை வழங்கும் முறையை தமிழக அரசும் மாற்றியமைக்க வேண்டும். அதன் மூலம் ஒரு டன் கரும்புக்கு குறைந்தபட்சம் 4,500 ரூபாய் கொள்முதல் விலையாக வழங்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என தனது அறிக்கை மூலமாக வலியுறுத்தியுள்ளார்.