சமூகம்தமிழ்நாடு

1 கோடி ரூபாய் முறைகேடு – 2 அதிகாரிகள் இடைநீக்கம் !

கடலூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டுவதில் 1 கோடி ரூபாய் முறைகேடு செய்த 2 அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இடைநீக்கம்

கடலூர் மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பரங்கிப்பேட்டையில் 182 வீடுகள் கட்டியதில் 1 கோடிக்கும் மேல் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் குறித்து கடலூர் மாவட்ட ஊழல் தடுப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் சென்னை குடிசை மாற்று வாரிய கண்காணிப்பு மேற்பொறியாளர் எட்வின்சாம், காஞ்சிபுரம் உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார் ஆகிய இருவரும் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து 2 நபரையும் இடைநீக்கம் செய்து தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குநர் கோவிந்தராவ் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts