மும்பையில் 1,400 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதை பொருள்
மும்பையில் மெபெட்ரோன் எனப்படும் செக்ஸ் உணர்வை தூண்டும் போதைப்பொருள் விற்கப்படுவதாக குற்றப்பிரிவு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் பல்ஹர் மாவட்டத்தில் உள்ள நலசோபரா பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் சோதனை நடத்தப்பட்டது. இதில், மெபெட்ரோன் என்னும் தடை செய்யப்பட்ட 703 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 1,400 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

