பொன்னியின் செல்வன் படத்தின் முதல் சிங்கள் பொன்னி நதி பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
மேக்கிங் வீடியோ
மணிரத்னம் இயக்கத்தில், லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய வரலாற்று கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் இரண்டு பாகங்களாக தயாராகியுள்ளது. இதன் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் பொன்னி நதி என்ற பாடல் கடந்த வாரம் வெளியானது.
இந்த பாடல் யூடியூபில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பொன்னி நதி பாடலின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
Here’s exclusive Behind The Scenes footage from #PonniNadhi!
▶️ https://t.co/yDRr5byRQK#PS1 releasing in theatres on 30th September in Tamil, Hindi, Telugu, Malayalam and Kannada! #PonniyinSelvan #ManiRatnam #ARRahman @madrastalkies_ @arrahman @tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/hrjlNeR3gV
— Lyca Productions (@LycaProductions) August 4, 2022

