அரியானாவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட குல்தீப் பிஷ்னோய் பாஜகவில் இணைந்தார்.
குல்தீப் பிஸ்னோய்
அரியானாவில் கடந்த ஜூன் மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலில், காங்கிரஸ் எம்.எல்.ஏ குல்தீப் பிஸ்னோய், பாஜக கூட்டணி கட்சியின் வேட்பாளரான திரவுபதி முர்முக்கு வாக்களித்தார். இதனால், கட்சியின் நடவடிக்கையால்கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இவர் 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். மேலும், இவரது மனைவியும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இந்நிலையில், தனது ஆதம்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பதவியை நேற்று முன்தினம் இவர் ராஜினாமா செய்தார். நேற்று தனது மனைவியுடன் சென்று முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

