நடிகர் கார்த்தி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
சாமி தரிசனம்
முத்தையா இயக்கத்தில், கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் விருமன். ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சூரி ஆர்.கே. சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சூர்யா – ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விருமன் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், இயக்குனர்கள் ஷங்கர், பாரதிராஜா, நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து இன்று நடிகர் கார்த்தி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Actor @Karthi_Offl Visit Lord Madurai Meenakshi Amman Temple After #VirumanAudioLaunch pic.twitter.com/4vE3uKxFoT
— Gokul Ravichandran (@Gokuloff) August 4, 2022

