புதுச்சேரியில் மது அருந்துவதற்காக சொந்த அத்தையை கொலை செய்து நகைகளை திருடி சென்ற நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
80 வயது மூதாட்டி
புதுச்சேரியில் உள்ள சாமிப்பிள்ளை தோட்டம் கம்பர் தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மனைவி அஞ்சலை. கணவர் இறந்த விட்டதால் 80 வயதான அந்த மூதாட்டி தனது மகளுடன் வசித்து வருகிறாள். தற்போது அவரது மகளும் வெளிநாட்டுக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மூதாட்டி அஞ்சலை கடந்த சில நாட்களாக வீட்டில் தனியாக வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. இதனால் அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வழக்கு பதிவு
போலீசார் வந்து வீட்டின் கதவை திறந்து பார்த்த போது அங்கு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மூதாட்டி அஞ்சலை பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த லாஸ்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கைரேகை நிபுணர்கள்
மேலும், அந்த குடியிருப்பு பகுதியில் சிசிடிவி கேமரா எதுவும் பொருத்தகப்படவில்லை. அதனால் கைரேகை நிபுணர்கள் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால் கைரேகையும் சரியாக சிக்கவில்லை. இதனால் போலீசாருக்கு இந்த வழக்கு மிகவும் சவலானது. இதனையடுத்து மூதாட்டி தனியாக வசிப்பதை தெரிந்துகொண்ட உறவினர்கள் யாராவது கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்தனர்.
போலீசார் சந்தேகம்
இதனால் காவல்துறையினர் அங்குள்ள செல்போன் டவரை வைத்து ஆய்வு செய்தனர். அப்போது அது கடலூரில் வசிக்கும் அஞ்சலையின் அண்ணன் கந்தவேலின் மகன் சுரேஷ் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், சுரேஷின் செல்போன் சம்பவம் நடந்த தேதியன்று கொலை நடந்த இடத்தில் இருந்தது தெரியவந்தது. மேலும், அவர் தான் கடைசியாக அஞ்சலை வீட்டிற்கு வந்து சென்றதும் தெரியவந்தது. அதனால் அவர் மீது போலீசாருக்கு சுரேஷின் மீது சந்தேகம் அதிகரித்தது.
விசாரணை
இதன்பெயரில் சுரேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், மது குடிப்பதற்காக தன் தந்தையிடம் அவ்வபோது பணம் திருடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் சுரேஷ். ஒரு கட்டத்தில் தனது தந்தையிடம் பணம் திருட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் புதுச்சேரியில் தனியாக வசித்து வந்த தனது அத்தையிடம் நலம் விசாரிப்பதுபோன்று நடித்து, அஞ்சலையை கொன்று அவரிடம் இருந்த 53 கிராம் தங்க நகைகளை நகைகளை பறித்து சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர், சுரேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர்