குடித்து விட்டு பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் நடத்துநரை தாக்கி கொலைசெய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
டிக்கெட் எடுக்க முடியாது
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று வழக்கம் போல் சென்றிருக்கிறது. அப்பொழுது குடித்து விட்டு வந்த மர்ம நபர் ஒருவர் அந்த பேருந்தில் ஏறி இருக்கிறார். இந்நிலையில் அந்தப் பேருந்தின் நடத்துநர் பெருமாள் இந்த குடிகார பயணியிடம் டிக்கெட் எடுக்க சொல்லி கேட்டிருக்கிறார். அதற்கு அந்த பயணி டிக்கெட் எடுக்க மறுத்து இருக்கிறார்.
தாக்குதல்
அதனையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியிருக்கிறது. அப்போது குடிபோதையிலிருந்த அந்த மர்ம நபர் பேருந்து நடத்துநர் பெருமாளை சரமாரியாகத் தாக்கியுள்ளார். அதில் நிலைகுலைந்து கீழே விழுந்த பெருமாள் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். இதை பார்த்த மற்ற பயணிகள் அந்த குடிகார நபரை பிடிக்க முயன்றனர். சுதாரித்து கொண்ட அந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.
மேலும், நடத்துநர் பெருமாள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவரை பரிசோதனை செய்த மேல்மருவத்தூர் மருத்துவர்கள் பெருமாள் ஏற்கனவே இருந்து விட்டதாக கூறினர்.
கைது
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுராந்தகம் பகுதி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், அந்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அதனைதொடர்ந்து நடத்துநரை கொன்று விட்டு தப்பி ஓடிய நபர் சூளைமேடு பகுதியை சேர்ந்த முருகன் என்பது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. மேலும், அந்த முருகன் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்த நடத்துநர் பெருமாள் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.
பட்டப்பகலில் அரசு பேருந்திலேயே நடந்த இந்த சம்பவம் மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது என்று பலரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளர்கள்.