தமிழ்நாடு

2 ஆண்டுகளுக்கு பின் மலர் கண்காட்சி !

நீலகிரி மாவட்டம் உதகையில் 2 ஆண்டுகளுக்கு பின் வருகிற 20ம் தேதி மலர்கண்காட்சி தொடங்குகிறது.

உதகை

நீலகிரி மாவட்டத்தின் தலைநகரான உதகை மலர் கண்காட்சிகு பெயர் போனது.
‘மலைகளின் அரசி’ என்னும் புனைபெயரும் உதகைக்கு உண்டு. தமிழ்நாடு சுற்றுலாத்தலங்களில் உதகை மிக முக்கியமான மற்றும் பெரிய சுற்றுலாத்தலமாகும்.

கொரோனாவால்

கடந்த 2 ஆண்டுகளாக உலக மக்களை வாட்டிவதைக்கும் கொரோனா பெரும் தொற்றால் இந்த மலர்கண்காட்சி நடைபெறாமல் இருந்தது. இதனால் கடந்த ஆண்டு இதற்கென பயிரிடப்பட்ட பலவகையான பூக்கள் பூத்து செடியிலேயே வாடிப்போயின. இந்த 2 ஆண்டுகள் மலர் கண்காட்சி நடைபெறாததால் தாவரவியல் பூங்காவிற்கு மக்கள் யாரும் வரவில்லை. இதனால், வியாபாரிகள் , ஹோட்டல் உரிமையாளர்கள் ஆகியோர் பெரும் நட்டத்தை சந்தித்து வருகின்றனர்.

 

மலர்கண்காட்சி

ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகளின் கண்களை குளிர வைக்கும் வண்ணம் உதகையிலுள்ள தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறும். வெளிநாடுகளில் இருந்து கூட அநேக சுற்றுலாவாசிகள் வந்து பூத்து குலுங்கி கொண்டிருக்கும் அழகிய வண்ண மலர்களை கண்டு களிப்பார்கள். 2 ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டு மலர் கண்காட்சி வரும் 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது.

முதல்வர் துவங்குகிறார்

20ம் தேதி தமிழக முதல்வர் மாண்புபிகு.மு க. ஸ்டாலின் அவர்கள் இந்த மலர்கண்காட்சியை துவங்கி வைக்க உள்ளார். மலர் கண்காட்சி மட்டும் இன்றி பல விழாக்கள் உதகையில் நடக்க இருப்பதால் அவற்றில் கவர்னர், துணை ஜனாதிபதி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். இதனால் நீலகிரி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

Related posts