அரசியல்இந்தியா

ராஜ் சபா எம் பி ஆகுகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ் – முதல்வர் கிபிட் !

திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் பிரகாஷ் ராஜ்

பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ். இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மத்தியில் ஆளும் பாஜக அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் விமர்சித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.


இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நடிகர் பிரகாஷ் ராஜ் தேர்வு செய்யபடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் 7 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளும் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியிடம் இருக்கின்றன.

ராஷ்ட்ரீய சமிதி கட்சி

தற்போது, பதவியில் உள்ள எம்.பிக்கள் வொடிடெலா லட்சுமிகாந்த் ராவ் மற்றும் தர்மபுரி அரவிந்த் ஆகியோர் வரும் ஜூன் 21ஆம் தேதியுடன் ஒய்வு பெறுகின்றனர். இதனால் அந்த மாநிலத்தில் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. தெலுங்கானா மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு வரும் ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சந்திப்பு

இந்நிலையில், ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி மற்றும் பாஜக இடையே 2 எம்பிக்கள் யார் என்ற போட்டி எழுந்திருக்கிறது. திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரும், முதலமைச்சருமான கே. சந்திரசேகர் ராவ் இரண்டு முறை சந்தித்து பேசியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் இருவரும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி சார்பில் திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ் மனு தாக்கல் செய்வார் என ததகவல் வெளியாகி உள்ளது.

Related posts