இளம் பெண்ணிற்கு தகாத முறையில் வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பிய சுவிக்கி டெலிவரி ஊழியரால் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் சுவிக்கி நிறுவனம்.
சுவிக்கி நிறுவனம்
2013ம் ஆண்டி இந்தியாவிற்குள் கொரியர் சேவை மற்றும் விநியோகத்திற்காக ‘பண்டில்’ என்ற இணைய வணிக வலைத்தளத்தை நந்தன் ரெட்டி மற்றும் ஸ்ரீஹர்ஷா மஜெட்டி என இரண்டு நபர்கள் இணைந்து வடிவமைத்தனர்.
பண்டில் நிறுவனம் உணவு விநியோக சந்தைக்குள் நுழையும் போது ‘சுவிக்கி‘ என பெயர் மாற்றப்பட்டது.
சுவிக்கி கோ
செப்டம்பர் 2019ல் சுவிக்கி pickup/drop சேவையை அறிமுகப்படுத்தியது. அதற்கு ‘சுவிக்கி கோ’ என்று பெயரிடப்பட்டது. இந்த சேவை வணிக வாடிக்கையாளர்கள் மற்றும் சில்லறை வாடிக்கையாளர்களுக்கு சலவை துணிகள், ஆவணங்கள், பொட்டலங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விநியோகம் செய்வதற்காக தொடங்கப்பட்டது.
சுவிக்கிவின் புதிய சேவையான சுவிக்கி இன்ஸ்டாமார்ட் ஆகஸ்ட் 2020ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சேவையின் மூலம் அனைத்து வாடிக்கையாளர்களும் இரவு நேரங்களில் குறிப்பாக இரவு 10 மணிக்கு மேல் தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை சுவிக்கி இன்ஸ்டாமார்ட் சேவை மூலம் ஆர்டர் செய்கின்றனர்.
தொலைபேசி எண்
செவ்வாய்க்கிழமை இரவு ப்ராப்தி என்ற இளம் பெண் ஸ்விக்கி இன்ஸ்டாமார்டில் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். பொதுவாக இந்த வகை செயலிகளில் Phone Number Masking தொழில்நுட்பம் இருக்கும். இதனால் டெலிவரி ஊழியரின் மொபைல் எண் வாடிக்கையாளர்களுக்கும், வாடிக்கையாளரின் மொபைல் எண் டெலிவரி ஊழியருக்கும் தெரியாது.
ஆனால் ப்ராப்தி தனது ஆர்டர் பற்றி விசாரிக்க சுவிக்கி ஆப் மூலம் இல்லாமல், தனது தொலைபேசியில் இருந்து நேரடியாக சுவிக்கி டெலிவரி ஊழியருக்கு கால் செய்துள்ளார். இதன் மூலம் ப்ராப்தின் தொலைபேசி எண் சுவிக்கி டெலிவரி ஊழியருக்கு கிடைத்துள்ளது.
இளம்பெண் புகார்
அன்று இரவு அந்த டெலிவரி ஊழியர் ப்ராப்தி ஆர்டர் செய்த பொருட்களை டெலிவரி செய்துவிட்டு சென்றுள்ளார். ஆனால் மறுநாள் முதல் இரவு நேரங்களில் ப்ராப்தி வின் வாட்ஸ் ஆப்பிற்கு தகாத முறையில் மெசேஜ் செய்துள்ளார். அதாவது ‘I Miss you lot’, ‘You beauty nice ‘ என இன்னும் பல மெசேஜ்களை தட்டிவிட்டுள்ளார்.
டெலிவரி ஊழியரிடம் இருந்து வந்த இந்த மெசேஜ்களை பார்த்து ப்ராப்தி மிகுந்த அதிர்ச்சியும் கோவமும் அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் சுவிக்கி நிறுவனத்தினரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் சுவிக்கி நிறுவனம் ப்ராப்திக்கு எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை.
இதனால் மேலும் கோவம் அடைந்த ப்ராப்தி இந்த விவகாரத்தை சமூக வலைத்தளத்திற்கு கொண்டுவந்துள்ளார். ப்ராப்தி நடந்த அனைத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலானது. பலரும் ப்ராப்திவுக்கு ஆதரவு தெரிவித்தும் சுவிக்கி நிறுவனத்திற்கு கண்டங்களை தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக சுவிக்கி நிறுவனம் ப்ராப்திதை தொடர்புகொண்டு இந்த சம்பவம் குறித்து தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளனர். மேலும், இதற்கு வருத்தம் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.
ஏற்கனவே, சுவிக்கி பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. தற்போது டெலிவரி ஊழியரால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது சுவிக்கி நிறுவனம்.