சமூகம்தமிழ்நாடு

10, 12ம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு – வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் வாழ்த்து !

10ம் மற்றும் 12ம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகளுடன் பொதுத்தேர்வு 

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறவில்லை. ஆனால், இந்த ஆண்டு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதனைத்தொடர்ந்து,  கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் பொதுத்தேர்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்து வந்தது.

school exam

பொதுத்தேர்வு 2021-2022

தமிழகத்தில் 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கி மே இறுதியில் முடிவுற்றது. இதில் தமிழகம் முழுவதும் 3,119 மையங்களில் 4,239 பறக்கும் படையினர்கள் முன்னிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை சுமார் 8.22 லட்சம் மாணவர்களும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 9.8 லட்சம் மாணவர்களும் தேர்வு எழுதினார்கள். தமிழகம் முழுவதும் 140 மையங்களிலும் தேர்வுத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வந்தது. தேர்வு முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

தேர்வு முடிவுகள்

இந்நிலையில், தமிழகம் முழுவதும் தேர்வுத்தாள் திருத்தும் பணி முடிவுற்ற நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடுவுகளை வெளியிட்டார். அதன்படி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.7% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் சுமார் 9% அதிகமாக தேர்ச்சிபெற்றுள்ளனர். 12ம் வகுப்பு தேர்வில் 93.76 % தேர்ச்சி பெற்றுள்ளனர்.

exam result

முதல்வர் வாழ்த்து

மேலும், 10ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவிட்டுள்ளார். பதிவில், ‘பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள், மேற்படிப்பில் கவனம் செலுத்தி உங்களது வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்ள வாழ்த்துகிறேன்.

தேர்ச்சி பெறாதவர்கள், மனம் தளர வேண்டாம் ! அடுத்த முயற்சியில் தேர்வு பெறுங்கள்! உங்களுக்கான வெற்றி காத்திருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts