ப்ரோமோ
பீஸ்ட் படத்தை அடுத்து நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘வாரிசு’. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஷாம், யோகி பாபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்க, தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இத்திரைப்படத்தின் சோல் ஆஃப் வாரிசு எனும் மூன்றாவது பாடல் இன்று மாலை 5 மணியளவில் வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்தது.
இந்நிலையில், இப்பாடலின் ப்ரோமோ வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Here’s a glimpse from the world of #Varisu 😍#SoulOfVarisu is releasing Today at 5 PM
🎙️ @KSChithra mam
🎵 @MusicThaman
🖋️ @Lyricist_Vivek#Thalapathy @actorvijay sir @SVC_official @directorvamshi @iamRashmika @7screenstudio @TSeries #BhushanKumar #KrishanKumar #ShivChanana pic.twitter.com/M2kVzszXk4— Sri Venkateswara Creations (@SVC_official) December 20, 2022

