ஹிந்தி நடிகை
பி.வாசு இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இதில் வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவி மரியா மற்றும் சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்க, லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சந்திரமுகி 2′ படத்தில் பிரபல ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத் ஜோதிகா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.