சினிமாவெள்ளித்திரை

ரசிகர்களுடன் படம் பார்த்த நடிகை நயன்தாரா!

திரில்லர் படம்

இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் ‘கனெக்ட்’. இதில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய்,  ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இடைவேளை இல்லாமல் 99 நிமிடம் ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சமீபத்தில் வெளியான டீசர் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

சிறப்பு காட்சி

இந்நிலையில், நேற்று சென்னை தி.நகரில் ‘கனெக்ட்’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன், வினய், ஜி.பி.முத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்ட சில ரசிகர்களும் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து படம் பார்க்க வந்த ரசிகர்களுடன் நயன்தாரா புகைப்படம் எடுத்துகொண்டார்.

Related posts