வைரலாகும் புகைப்படம்
நகைச்சுவை நடிகர் சூரி முதல் முறையாக கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘விடுதலை’. இப்படத்தை எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை அடிப்படையாக வைத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இதில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க, இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் சூரி விடுதலை படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.