விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘லத்தி’ திரைப்படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.
லிரிக்கல் வீடியோ
இயக்குனர் வினோத் குமார் இயக்க, நடிகர் விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘லத்தி’. இதில் சுனைனா கதாநாயகியாக நடிக்க, ரமணா மற்றும் நந்தா தனது ‘ராணா புரொடக்ஷன்’ நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர். அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி கவனம் பெற்றது. அதனையடுத்து இந்த படத்தின் ‘ஊஞ்சல் மனம் ஆடுமே’ எனும் பாடல் வெளியாகி வைரலானது. இந்நிலையில், ‘லத்தி’ திரைப்படத்தின் ‘வீரத்துக்கோர் நிறமுண்டு’ என்ற புதிய பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.