அரசியல்இந்தியாதமிழ்நாடு

மாநிலங்களவை தேர்தல் – கோடிகளை தாண்டும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு !

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து உள்ள நிலையில் திமுக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களின் அசையும் மற்றும் அசைய சொத்துக்களின் விவரங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

திமுக வேட்பாளர்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக வேட்பாளர் எஸ்.கல்யாணசுந்தரத்தின் பெயரில் 43.46 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்கள், 3.46 கோடி ரூபாய் மதிப்பு அசையாச் சொத்துக்கள் உள்ளன. அவரது இரு மனைவியர் பெயரில் 113 சவரன் தங்க, வைர நகைகள் உள்பட 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்கள், 1.39 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையாச் சொத்துக்கள் உள்ளன.

மேலும் கல்யாணசுந்தரம் பெயரில் 4.5 லட்சம் ரூபாய் ரொக்கமும், மனைவிகள் பெயரில் 20.76 லட்சம் ரூபாய் கடனும் இருப்பதாகவும் பிரமாணபத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

சென்னை, கொளத்தூர் பகுதியை சேர்ந்த திமுக வேட்பாளர் கிரிராஜனின் பெயரில் 1.53 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் 5.12 கோடி ரூபாய் மதிப்பு அசையா சொத்துக்கள் உள்ளன. மனைவி பெயரில் 1.4 கோடிரூபாய்  மதிப்பு அசையும் சொத்துக்கள், ரூ.39.47 லட்சம் ரூபாய் மதிப்பு அசையா சொத்துக்கள் உள்ளன. கிரிராஜனுக்கு ரூ.3.17 கோடி ரூபாய் கடனும், மனைவி பெயரில் ரூ.2.87 கோடிரூபாய்  கடனும் உள்ளதாக பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திமுக வேட்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் பெயரில் ரூ.17.15 லட்சம் ரூபாய் அசையும் சொத்துக்கள், ரூ.78.8 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளன. மனைவி பெயரில் ரூ.27 லட்சம் அசையும் சொத்துகள், ரூ.47 லட்சம் ரூபாய் மதிப்பு அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

dmk candidates 2022 rajya sabha

காங்கிரஸ் வேட்பாளர்

காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் ப.சிதம்பரம் பெயரில் 32 கிராம் தங்கம், 3.25 கேரட் வைரம் உட்பட ரூ.135 கோடி ரூபாய் அசையும் சொத்துகள் உள்ளன என்றும் பரம்பரை சொத்து உட்பட ரூ.5.83 கோடி ரூபாய் மதிப்பு அசையா சொத்துகள் உள்ளன. மனைவி பெயரில் 1457 கிராம் தங்கம், 76.71 கேரட் வைரம் உட்பட ரூ.17.39 கோடி ரூபாய் அசையும் சொத்து, ரூ.26.53 கோடி ரூபாய் மதிப்பு அசையா சொத்து உள்ளன.

மேலும் ரூ.76.46 லட்சம் ரூபாய் கடன் உள்ளதாகவும், மனைவி பெயரில் ரூ.5 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

candidate mp rajya sabha application

அதிமுக வேட்பாளர்கள்

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் பெயரில் ரூ.8.76 லட்சம் ரூபாய் அசையும் சொத்தும், ரூ.18.45 லட்சம் ரூபாய் மதிப்பு அசையா சொத்தும், மனைவி பெயரில் ரூ.27.22 லட்சம் ரூபாய் அசையும் சொத்தும், ரூ.2.10 கோடி ரூபாய் மதிப்பு அசையா சொத்து மற்றும் தாயார் பெயரில் ரூ.61.84 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்தும் உள்ளதாக என பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக வேட்பாளர் ஆர். தர்மர் பெயரில் ரூ.14.49 லட்சம் ரூபாய் மதிப்பு அசையும் சொத்து, ரூ.62.37 லட்சம் ரூபாய் மதிப்பு அசையா சொத்தும், மனைவி பெயரில் ரூ.17 லட்சம் ரூபாய் அசையா சொத்தும், மகள்கள் பெயரில் ரூ.36 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்து இருப்பதாகவும் பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

admk candidates rajya sabha

Related posts