Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

மதுராந்தகம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தார் மரகதம் குமரவேல் MLA

November 7, 2025

ஆட்சிக்கு வந்தவுடன் ஆனைமலை நல்லாறு திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் – நயினார் நாகேந்திரன்

November 7, 2025

மாணவர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் – துணை ஜனாதிபதி C.P.ராதாகிருஷ்ணன்

November 7, 2025
Facebook X (Twitter) Instagram
Saturday, November 8
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில்! – பன்னிரண்டு ராசிக்காரர்களும் சென்று வழிபடவேண்டிய திருத்தலம்!

செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில்! – பன்னிரண்டு ராசிக்காரர்களும் சென்று வழிபடவேண்டிய திருத்தலம்!

June 1, 20222 Mins Read549 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நம் வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்களுக்கு நாம் பிறந்த நேரம், ராசி, நட்சத்திரம் இவைகளும் ஒரு காரணம்தான். நல்ல நேரத்தில், நல்ல நட்சத்திரத்தில் யோகத்தோடு பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டமும் சேர்ந்து இருக்கும். நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு இணையாக, ஆண்டவன் தலையெழுத்தை எழுதி விடுகிறான்.

நம்முடைய முன் ஜென்மத்தில் நாம் செய்த பாவத்திற்கான பலனைத் தான் இந்த ஜென்மத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். எப்பேர்பட்ட பாவத்திற்கும் பிராயச்சித்தம் தரக்கூடிய ஒரு கோவிலை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அப்படி இந்த கோவிலில் என்ன சிறப்பு இருக்கின்றது என்பதை தெரிந்துகொள்ளலாமா?

chettikulam ekambareswarar temple

இந்த கோவிலில் அருள் பாவிக்கும் மூலவரின் பெயர் ஏகாம்பரேஸ்வரர். அம்பாள், காமாட்சி அம்மன் அவதாரத்தில் காட்சி அளிக்கிறார்கள். இந்த கோவிலில் ஏகாம்பரேஸ்வரர் வட்ட வடிவத்திலான பீடத்தில் அமர்ந்துள்ளார். அந்த வட்ட வடிவமான பீடத்தில் 12 ராசிகளும் பொறிக்கப்பட்டுள்ளது.

12 ராசிகளை ஒரே சக்கர வடிவில் கொண்டுள்ள இந்த திருக்கோவில், சித்தர் சிவ பீடம் என்று அழைக்கப்பட்டு, ராசி கோவிலாக புகழ் பெற்று இன்றளவும் திகழ்கிறது. இதுவே இந்த கோவிலின் மிகப்பெரிய சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது.

நீங்கள் எந்த ராசியில் பிறந்தவர்களாக இருந்தாலும், ஒரே ஒருமுறை இந்த கோவிலுக்கு சென்று, 12 ராசிகள் பொறிக்கப்பட்டிருக்கும் பீடத்தில் அமர்ந்துள்ள ஏகாம்பரேஸ்வரரை, தரிசனம் செய்துவிட்டு வந்தால், உங்கள் வாழ்வில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் நிச்சயம் தீரும்.

இதையும் படிக்க :  இளைஞர்களுக்கு அரசியல் தேவையில்லை? -பெரியவாவின் அரசியல் பார்வை! | EPISODE - 1

12 zodiac signs

குறிப்பாக ஜாதக கட்டத்தில் இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்திற்குமே நிவர்த்தி கிடைக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.

இதோடு மட்டுமல்லாமல் இந்த திருக்கோவிலில் 27 நட்சத்திரங்களுக்கும், அதற்குரிய மரங்கள் இருக்கின்றன.

உங்களது நட்சத்திரம் எதுவோ, அந்த நட்சத்திரத்திற்குரிய மரத்திற்கு ஒரு குடம் தண்ணீரை ஊற்றி, வழிபாடு செய்தால் உங்களின் பாவங்கள் நீங்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

தல வரலாறு:

இந்த கோவில் அமைந்திருக்கும் இடம், முன்பொரு காலத்தில் கடம்ப வனமாக இருந்து வந்தது. அப்போது அந்த வனம் சோழ மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்தது.

வியாபாரி ஒருவன் தன்னுடைய வியாபாரத்தை முடித்து விட்டு, தனது ஊருக்கு செல்லும்போது, பொழுது சாய்ந்த காரணத்தினால், அந்த வனத்திலே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அந்த வியாபாரி இரவு தூங்கிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று ஒரு சத்தம் கேட்டு, கண் விழித்தான்.

எதிரே பார்த்தால், சிவபெருமானை முனிவர்கள் அபிஷேகம் செய்து வழிபட்டு கொண்டிருந்த காட்சி தென்பட்டது.

lord shiva

இந்த காட்சியை கண்ட வழிப்போக்கன் அலறி அடித்து சென்று சோழ மன்னனிடம், நடந்ததைக் கூறினான்.

இதையும் படிக்க :  விடுமுறை நாட்கள் : குற்றாலத்தில் குவிந்த சுற்றலா பயணிகள் !

சம்பவத்தை கேட்ட சோழமன்னன், உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்தான்.

அப்போது முதியவர் ஒருவர் கையில் கரும்போடு தூரத்தில் நடந்து சென்று, கண்ணுக்கு தெரியாமல் காற்றோடு காற்றாக கலந்து மறைந்து விட்டார்.

முதியவர் மறைந்த அந்த கிழக்கு திசையில் முருகப்பெருமான் தண்டாயுதபாணியாக, சோழ மன்னனுக்கும் காட்சி அளித்ததாகவும் கூறப்படுகின்றது.

இதன் காரணமாக, சோழ மன்னன், ஈசன் வழிப்போக்கனுக்கு காட்சி அளித்த அந்த இடத்தில், ஏகாம்பரேஸ்வரருக்கு ஒரு ஆலயம் அமைத்தார்.

முருகப்பெருமான் காட்சி அளித்த குன்றின்மீது, தண்டாயுதபாணிக்கு தனியாக கிழக்குப் பக்கமாக, ஒரு ஆலயத்தை அமைத்ததாகவும் வரலாறு கூறுகின்றது.

ஆகவே ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு, கிழக்கு குன்றின்மீது தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

பலன்கள்:

வாழ்க்கையில் தீராத வறுமையில் உள்ளவர்கள் இத்தலத்தில் இருக்கும் குபேரர்து சன்னிதிக்கு சென்று, சித்ரலேகா உடன் இருக்கும் குபேர பகவானை தரிசனம் செய்ய வேண்டும்.

green kungumam

அந்த சன்னதியில் கொடுக்கப்படும் பச்சை குங்குமத்தை பிரசாதமாகப் பெற்றுக் கொண்டு, தினந்தோறும் நெற்றியில் இட்டுக் கொண்டால், தீராத வறுமையும் தீரும்.

இதோடு மட்டுமல்லாமல் இத்தளத்திலிருந்து குபேர பொம்மையை வாங்கி நம் வீட்டில் வைத்தால் அது நமக்கு அதிர்ஷ்டத்தைத் தரும்.

 

12 zodiac signs 27 stars astrology chettikulam dhandayudhapani temple divinity ekambareswarar temple featured goddess kamatchi amman green kungumam Hinduism History lord kuberan lord murugan Lord shiva mythology pilgrimage shaivism spirituality tamil nadu trichy
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇதுவரை யாரும் செய்யாத ப்ரோமோஷன்- விக்ரம் !
Next Article மாநிலங்களவை தேர்தல் – கோடிகளை தாண்டும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு !

Related Posts

Editor's Picks

சபரிமலை பம்பா எருமேலி பகுதிகளில் பாக்கெட் ஷாம்பு ரசாயன குங்குமம் விற்க தடை

November 7, 2025
Editor's Picks

சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு நாளை தொடங்குகிறது

October 31, 2025
Editor's Picks

திருப்பதியில் தல தல என கத்திய ரசிகர்கள், சைகை மூலம் சைலண்டாக்கிய அஜித்

October 28, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20221,991 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,860 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,764 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20221,991 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,860 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,764 Views
Our Picks

மதுராந்தகம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தார் மரகதம் குமரவேல் MLA

November 7, 2025

ஆட்சிக்கு வந்தவுடன் ஆனைமலை நல்லாறு திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் – நயினார் நாகேந்திரன்

November 7, 2025

மாணவர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் – துணை ஜனாதிபதி C.P.ராதாகிருஷ்ணன்

November 7, 2025

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2025 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.