உணவு

புதினா! – தெரிந்த பொருள் தெரியாத தகவல்கள்

வீட்டில் மிக மிக எளிதாக வளரக் கூடிய மூலிகைச் செடிகளில் புதினாவும் ஒன்று. சொல்லப் போனால் புதினா உங்கள் தோட்டத்தையே ஆக்கிரமிக்கும் அளவுக்கு வளரக் கூடியது. புதினாவில் 600-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.

புதினாவில் 40%-க்கும் அதிகமாக உள்ள மென்தால் அதன் மருத்துவ குணங்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.இது ஆங்கிலத்தில் peppermint என்று அழைக்கப்படுகிறது.

புதினாவின் தன்மைகளில் சில:

Antibacterial (பாக்டீரியாவை அழித்தல் மற்றும் தடுத்தல்)

Anti-inflammatory (வீக்கம், வலி போக்குதல்)

Antiviral (வைரஸை அழித்தல் மற்றும் தடுத்தல்)

Analgesic (வலியைக் குறைத்தல்)

Antispasmodic (தசைப்பிடிப்புகளைப் போக்குதல் மற்றும் தவிர்த்தல்)

Antipruritic (அரிப்பைப் போக்குதல்)

Antiseptic (கிருமிகள் தாக்காமல் தடுத்தல்)

Antifungal (fungi-யை அழித்தல் மற்றும் தடுத்தல்)

Anesthetic (வலியை உணர வைக்காதிருத்தல்)

Antiulcer (அல்சர் ஏற்படாமல் தடுத்தல்)

Expectorant (சளியை வெளியேற்றுதல்)

புதினாவின் மருத்துவ குணங்கள் :

நம் சமையலில் பல பரிமாணங்கள் எடுக்கும் புதினாவின் மருத்துவ குணங்களில் சில :

சளி, இருமலைப் போக்குகிறது

அசீரணத்தைச் சரி செய்கிறது

வாய்வு, உப்புசம் போன்ற அசீரணக் கோளாறுகளைச் சரி செய்கிறது

வாந்தி மற்றும் வாந்தி ஏற்படும் உணர்வை சரி செய்கிறது

மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளைப் போக்குகிறது

தலைவலியைப் போக்க உதவுகிறது

பற்களின் நலனைப் பாதுகாக்க உதவுகிறது; பல் சொத்தையைப் போக்க உதவுகிறது.தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் மார்பகக் காம்புகளில் ஏற்படும் வெடிப்பு மற்றும் வலியைப் போக்க புதினா எண்ணெய் உதவுகிறது.சருமத்தில் ஏற்படும்.

எரிச்சல் மற்றும் அரிப்பைப் போக்குகிறது.தசைப்பிடிப்பைப் போக்க உதவுகிறது.நினைவாற்றலை அதிகரிக்கிறது.மன அழுத்தத்தைப் போக்குகிறது.

இவ்வளவு நன்மைகளை தனக்குள் கொண்டிருக்கும் புதினா, இயற்கை நமக்களித்த அற்புத கொடை.

Related posts