தமிழ்நாடு

தருமபுரியில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த இளைஞர் – போக்சோவில் கைது !

தருமபுரி அருகே சமூக வலைத்தளம் மூலமாக பழகி சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

தருமபுரி மாவட்டம்

தருமபுரி அருகே உள்ள பள்ளியில் 11- ம் வகுப்பு படிக்கும் சிறுமி, விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியை சேர்ந்த நவீன்குமார் என்பவருடன் சமூக வலைதளம் மூலமாக பழகி நண்பர் ஆகியுள்ளார். தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் குறுங்செய்தி
அனுப்பியும் கருத்து கூறி பழகி வந்தனர்.

சமூக வலைத்தளத்தில் உறவு

இந்நிலையில், கடந்த மாதம் சிறுமியை ஆசை வார்த்தை கூறி நவீன்குமார் தருமபுரி வந்து கடத்தி சென்றுள்ளார். வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பாததால் சிறுமியின் தாய் தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து காவல் துறைனர் சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர்.

விசாரணை

அப்போது தருமபுரியை சேர்ந்த சிறுமியும் விழுப்புரத்தை சேர்ந்த நவீன்குமார் என்பவரும் சமூக வலைத்தளத்தின் மூலமாக பழகி வருவது தெரியவந்தது. இதனை அடுத்து செல்போன் எண்ணை வைத்து காவல் துறையினர் தேடிவந்தனர்.
அப்பொழுது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார் என்று தெரிய வந்தது. மேலும், திருமணம் செய்து தஞ்சாவூர் பகுதியில்நவீன் குமாரும் சிறுமியும் தங்கிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. பின்னர் நவீன்குமாரையும் சிறுமியையும் போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

போக்சோவில் கைது

இதில் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்ததாக நவீன்குமார் மீது தருமபுரி மகளிர் காவல் துறையினர் போக்சோவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை சிகிக்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சமூக வலைத்தள மூலமாக பழகி ஆசை வார்த்தை கூறி, கடத்தி சென்று குழந்தை திருமணம் செய்த சம்பவம் தருமபுரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts