சமூகம்தமிழ்நாடு

பணத்திற்காக பெற்ற மகளின் கருமுட்டையை விற்கும் தாய்; தாயால் சிறுமிக்கு நடந்த கொடுமை!

தவறான நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு துணையாக இருந்து, கருமுட்டைகளை மருத்துவமனைகளில் விற்று வந்த பெண் அவரது ஆண் நண்பர், பெண் புரோக்கர் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அடிக்கடி

ஈரோடு வலசு திருவள்ளுவர் நகரை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து தனது 4 வயது மகளுடன் தனியாக வசித்து வந்ததார். இந்நிலையில், சையது அலி என்பவரை இரண்டாம் முறையாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இந்த பெண் அடிக்கடி தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று கருமுட்டையை சட்ட விரோதமாக விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை தனது இரண்டாவது கணவர் சையது அலியுடன் சேர்ந்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், ஈரோடு கைக்காட்டி வலசு திருவள்ளுவர் நகரை சேர்ந்த மாலதி என்பவரும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாலதி, கருமுட்டை விற்பனை செய்யும் புரோக்கர் ஆக செயல்பட்டு வருகிறார்.

girl

பாலியல் தொல்லை

கருமுட்டைவிற்கும் பெண்ணின் மகளுக்கு, சையது அலி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் அனைவரும் சேர்ந்து இதன் மூலம் சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்யும் முடிவுக்கு வந்திருக்கின்றனர். சிறுமியின் தாய் மற்றும் இவரது சையது அலி, புரோக்கர் மாலதி ஆகியோர் ஈரோட்டை சேர்ந்த ஒருவர் மூலம் சிறுமிக்கு போலியான பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை தயாரித்திருக்கின்றனர்.

கருமுட்டை விற்பனை

16 வயதான சிறுமிக்கு அதிக வயது என கூறி சிறுமியின் கருமுட்டைகளை மருத்துவமனைகளில் விற்று வந்துள்ளனர். இதனால் சிறுமிக்கு 20 ஆயிரம் ரூபாயும், புரோக்கருக்கு 5 ஆயிரம் ரூபாயும் மருத்துவமனைகளால் வழங்கப்படுமாம். இதுவரை சிறுமியின் 12  முதல் 16 வயது வரை 8 முறை கருமுட்டைகளை ஈரோடு, சேலம், பெருந்துறை, ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் விற்றுள்ளனர்.

Embryo

உறவினர் வீட்டில் தஞ்சம்

சையது அலியால் சிறுமிக்கு தாங்கமுடியாத தொல்லை ஏற்பட்டுள்ளது. இதனால், சிறுமி அங்கிருந்து தப்பி சேலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு தஞ்சமடைந்துள்ளார். அங்கிருந்த உறவினர்களிடம், நடந்த அனைத்தையும் கூறியிருக்கிறார். இதனையடுத்து, உறவினர்கள் சிறுமியை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர்.

10 பிரிவுகளின் கீழ் வழக்கு

சிறுமி அளித்த புகாரை அடுத்து, பணத்திற்கு அலையும் தாய்,  சையது அலி மற்றும் புரோக்கர் மாலதி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து போக்ஸோ உட்பட 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். பின்னர், குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறுமியின் தாய் மற்றும் புரோக்கரை சேலம் சிறையிலும் சையது அலியை கோபி சிறையிலும் அடைத்தனர். சிறுமிக்கு போலியாக பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை பெற்றுத்தந்த இளைஞர் தலைமறைவாகி விட்டதாகவும், அவரது செல்போன்னை வைத்து போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

Pocso Act

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது காப்பகத்தில் சேர்க்கப்பட்டதோடு, புரோக்கர் மாலதி இதுபோன்று பல்வேறு சிறுமிகளின் கருமுட்டைகளை விற்று இருக்கிறாரா என போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related posts