மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் சீண்டல்
சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளராக பணியாற்றுபவர் கோபி. இவர் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வரும், 27 வயது மாணவி ஒருவரைக் கோபி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆய்வுக்கட்டுரை சரிபார்க்க வேண்டும் என மாணவியை அழைத்திருக்கிறார். மாணவி முன்னெச்சரிக்கையாக தன்னுடன் உறவினர்கள் சிலரையும் அழைத்துச் சென்றிருக்கிறார். அவர்களைப் பல்கலைக்கழகத்துக்குள் இருக்கும் பதிவாளர் குடியிருப்புக்கு வெளியே அமரவைத்துவிட்டு, மாணவி மட்டும் குடியிருப்புக்குள் சென்றிருக்கிறார்.
மாணவி உள்ளே சென்ற சிறிது நேரத்திலேயே மாணவியின் சத்தம்கேட்டிருக்கிறது. அதனையடுத்து வெளியே நின்ற உறவினர்கள் உள்ளே சென்று மாணவியிடம் என்ன நடந்தது கேட்டுள்ளனர். அதற்கு மாணவி பேராசியர் கோபி தவறாக நடக்க முற்பட்டதாக கூறியுள்ளார். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள் பேராசிரியர் கோபியைத் தாக்கியுள்ளனர். இதில், பேராசிரியர் கோபி உடலில் காயம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, நேற்று வீடு திருப்பியுள்ளார்.
அதன் பின்னர் நடந்த சம்பவம் தொடர்பாக பேராசிரியர் கோபி கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதன்பேரில் சம்பந்தப்பட்ட மாணவியின் உறவினர்கள் மூன்று பேர்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதையடுத்து பாலியல் சீண்டல் சம்பவம் தொடர்பாக மாணவி கருப்பூர் காவல் நிலையத்தில் பேராசிரியர் கோபி மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். இது சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் கோபி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்ததால் அவரை பொக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

