நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக உதயநிதி நடிக்கிறார்.
புதிய படம்
திமுகவின் இளைஞரணி செயலாளர் மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினர் என்று தீவிரமாக அரசியலில் செயல்பட்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின். அதே சமயத்தில் சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நெஞ்சுக்கு நீதி படம் மாக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன், மகிழ் திருமேனியின் கலக தலைவன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். இதை உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
15 வருட @RedGiantMovies_-ன் சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக உடன் பங்காற்றியவர்களை நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவித்தோம். @RKFI தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான
அறிவிப்பை வெளியிட்ட @ikamalhaasan சாருக்கு நன்றி. pic.twitter.com/SA0rc7uItW— Udhay (@Udhaystalin) July 26, 2022
