தமிழ்நாட்டில் பள்ளி மாணவிகளின் மர்ம மரணங்கள் மற்றும் தற்கொலை குறித்து
ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழ்நாட்டில் பள்ளி மாணவிகள் மர்மமான முறையில் இறப்பதும், தற்கொலைக்கு முயல்வதும் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவி ஸ்ரீமதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மண்ணின் ஈரம் கூட இன்னும் காயாத நிலையில், திருவள்ளூரில் மற்றொரு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கி உள்ளது.
மாணவி ஸ்ரீமதி மரணத்தைத் தொடர்ந்து சேலத்தில் அரசுப் பள்ளி மாணவி இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவமும், திருப்பூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவமும், செங்கல்பட்டில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை முடிவு எதற்கும் தீர்வாகாது
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி விடுதியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவி சரளா தூக்கிட்ட நிலையில், சடலமாக காவல் துறையினரால் கண்டெடுக்கப்பட்டார். அந்த மாணவி காலையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில், அந்த தகவலை பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு மிகவும் தாமதமாக தெரிவித்ததாக சொல்லப்படும்
தகவல் மிகவும் கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் பள்ளி மாணவிகள் மர்மமான முறையில் இறப்பதும், தற்கொலைக்கு முயல்வது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவிகளின் மர்ம மரண வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டாலும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க @CMOTamilnadu உத்தரவிட வேண்டும். pic.twitter.com/qOlLbd8KSq— Vijayakant (@iVijayakant) July 26, 2022
மேலும் மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி பெற்றோரும், உறவினர்களும் புகார் தெரிவித்துள்ளனர். மணவி ஸ்ரீமதி மரணத்தில் உள்ள மர்மம் விலகுவதற்கு முன்பே மற்றொரு மாணவி மர்மமான மபறையில் உயிரிழந்திருப்பது தமிழ்நாடு மக்களை மேலும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தற்கொலை முடிவு எதற்கும் தீர்வாகாது என்பதை மாணவ, மாணவிகள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
எந்த பிரச்சினையாக இருந்தாலும் மாணவர்கள் அதனை மனதில் வைத்து பூட்டி கொள்ளாமல் பெற்றோரிடமே, ஆசிரியரிடமோ மனம் விட்டு சொல்லுங்கள். அப்போதுதான் உரிய தீர்வு காண முடியும். மேலும் பள்ளி மாணவிகளின் மர்ம மரண வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாறஅறப்பட்டாலும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

