ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளம்பரங்களில் நடிகர்கள் நடிப்பதை தவிர்க்க வேண்டும். ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் நடிகர்களை திரையரங்குளில் மட்டும் பார்த்து ரசிக்க வேண்டும் என இயக்குனர் அமீர் காட்டமாக கூறியுள்ளார்.
ரம்மி
ஆன்லைன் ரம்மி காரணமாக தமிழகத்தில் கொலை, தற்கொலை உள்ளிட்ட சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கல்லூரி மாணவர்கள், காவலர்கள், தொழிலதிபர்கள் என சமீபகாலமாக ரம்மியால் தற்கொலை பட்டியல் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளையும், நடிகர்கள் விளம்பரத்தில் நடிப்பதையும் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இயக்குனர் அமீர்
மதுரையில் உள்ள நான்காம் தமிழ்ச்சங்க செந்தமிழ் கலை மற்றும் கீழ்த்திசை கல்லூரி முப்பெரும் விழா நடைப்பெற்றது. அதில் இயக்குனர் அமீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசியவர், ‘ஆன்லைன் ரம்மி விளையாட்டு உள்ளிட்ட விளம்பரத்தில் நடிப்பதை நடிகர்கள் பொறுப்புணர்ந்து நடக்க வேண்டும்’ என கூறினார்.
செய்தியாளர்கள் செந்திப்பு
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் அமீர், ‘மதுரையில் உள்ள நான்காம் தமிழ்ச்சங்க செந்தமிழ் கலை மற்றும் கீழ்த்திசை கல்லூரி தனித்து விடப்பட்ட தீவு போல உள்ளது. 1903 முதல் இயங்கி வரும் நான்காம் தமிழ்ச்சங்க செந்தமிழ் கல்லூரியை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் இணைக்காமல் இருப்பது வேதனையாக உள்ளது.
முதல்வருக்கு கோரிக்கை
இக்கல்லூரியை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் இணைக்க வேண்டியது அவசியமான ஓன்று. தமிழக முதல்வர் இக்கல்லூரியை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழடிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நான்காம் தமிழ்ச்சங்க செந்தமிழ் கல்லூரிக்கும் தர வேண்டும்.
விளம்பரத்தில் நடிக்கக்கூடாது
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளம்பரங்களில் நடிகர்கள் நடிப்பதை தவிர்க்க வேண்டும். ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் நடிகர்களை திரையரங்குளில் மட்டும் பார்த்து ரசிக்க வேண்டும். நடிகர்களை வீட்டிற்கு சுமந்து செல்லவேண்டாம். ரசிகர்கள் நடிகர்களை திரையரங்களில் மட்டுமே ரசிப்பது அகசிறந்தது’ என இயக்குனர் மற்றும் நடிகராகிய அமீர் கூறியுள்ளார்.