ஐநா மூலம் சீனா, ரஷியா மற்றும் அமெரிக்காவை கட்டுப்படுத்த முடியாத நிலை நீடிப்பதை மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒபரடோர் வலியுறுத்தியுள்ளார்.
குழு அமைப்பு
உலகில் உள்ள நாடுகளுக்கு இடையே எழும் அதிகார போட்டி காரணமாக தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் போர் பதற்ற சூழல் நிலவி வருகிறது. இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள மெக்சிகோ நாட்டு அதிபர் லோபஸ் ஒபரடோர், ஜனசபை மூலம் சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்காவை கட்டுப்படுத்த முடியாத சூழல் நீடிப்பதை காணமுடிகிறது. இதனால் உலகில் போர் நடைபெறுவதை தடுக்க, இந்திய பிரதமர் மோடி, போப் பிரான்சிஸ், ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் ஆகிய மூன்று பேர் தலைமையிலான குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஐநாவிடம் தாம் பரிந்துரைக்க இருப்பதாக தெரிவித்துள்ளதாக லோபஸ் கூறியுள்ளார். மேலும், இந்திய பிரதமர் மோடி உட்பட மூவரின் தலையீட்டை சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் ஏற்று கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டிருக்கிறார்.

