பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.
முக கவசம்
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 4 கோடியை தாண்டியுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் டெல்லியில் இன்று மட்டும் 2,146 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தினந்தோறும் உயரும் கொரோனா பரவலை தடுக்க டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்பெயரில், பொது இடங்களில் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், முக கவசம் அணிய தவறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஒன்றாக பயணிக்கும் நபர்களுக்கு இந்த விதி பொருந்தாது என்றும் டெல்லி அரசு அறிவித்துள்ளது.

