அரசியல்சமூகம்

தமிழக அரசு திட்டமிடாமல் செயல்படுகிறது – எடப்பாடி பழனிசாமி!

மழை வெள்ளம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக முகலிவாக்கம், மணப்பாக்கம், கொளப்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளின் வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இந்நிலையில், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.

செய்தியாளர்கள் சந்திப்பு 

பின்னர் சென்னை மதனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என்பது பொய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. மேலும், தமிழக அரசு அவசர காலத்தில் திட்டமிடாமல் செயல்பட்டதால்தான் மழைநீர் தேங்கியுள்ளது’ என கூறியுள்ளார்.

Related posts