சமூகம்சினிமா

நாடக கலைஞர்களுடன் நடனமாடிய பிரபல நடிகர்!

பிரபல நடிகர்

கடந்த 2005-ம் ஆண்டு வெளியான சுக்ரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதனைத்த்தொடர்ந்து டிஷ்யூம், காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபல இசையமைப்பாளரானார். மேலும், நான், சலீம், பிச்சைக்காரன், சைத்தான், காளி, திமிரு புடிச்சவன் ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். மேலும், தற்போது கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், சங்கரதாஸ் சுவாமிகளின் 100வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு புதுச்சேரியில் நாடகக்கலைஞர்கள் ஊர்வலம் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் ஆண்டனி பங்கேற்று நடுரோட்டில் நடனமாடினார்.

Related posts