நகைசுவை நடிகர் சூரி பேசிய சர்ச்சையான கருத்துக்கு தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சர்ச்சை கருத்து
கார்த்தி அதிதி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள விருமன் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் மதுரையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் சூரி, ‘ஆயிரம் கோயில்கள் அன்னச்சத்திரங்கள் கட்டுவதை விட ஒருவருக்கு கல்வி கொடுப்பது சிறந்தது’ என்று கூறினார். அவரின் இந்த கருத்துக்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். மேலும், இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், இதற்கு நடிகர் சூரி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
விளக்கம்
அதில், கல்வி சிறப்பான விஷயம் என்ற எனது கருத்தை சிலர் தவறாக புரிந்து கொண்டது வருத்தம் அளிக்கிறது. அன்று மகாகவி பாரதியார் சொன்னதைத்தான் நானும் சொன்னேன். நான் படிக்காதவன், எனவே மற்றவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக அப்படி சொன்னேன். நான் கோவில்களுக்கு எதிரானவன் இல்லை. எனது ஓட்டல்களுக்கும் அம்மன் பெயரை தான் வைத்திருக்கிறேன்.

