சினிமாவெள்ளித்திரை

வைரலாகும் கார்த்தி பட போஸ்டர்!

வைரலாகும் போஸ்டர்

நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’, ‘சர்தார்’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வியாபார ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றுள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அதேபோல் ‘சர்தார்’ திரைப்படமும் ரூ.100 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதனைத்தொடர்ந்து நடிகர் கார்த்தி ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ போன்ற படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கும் ‘ஜப்பான்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

இந்நிலையில், ஜப்பான் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts