பிரபல திரைப்பட நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவம்மா இன்று காலமானார்.
தமிழில் 1984ம் ஆண்டு வெளியான ‘நன்றி’ என்ற திரைப்படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக அறிமுகமானவர் நடிகர் அர்ஜுன். தொடர்ந்து யார் சங்கர்குரு தாய்மேல் ஆணை, படிச்ச புள்ள ஆகிய வெற்றி படங்களில் நடித்தார். இதனைத்தொடர்ந்து 1992ம் ஆண்டு வெளியான சேவகன் என்ற படத்தை இயக்கியிருந்தார். மேலும், ஏழுமலை, கிரி, அரசாட்சி, வாத்தியார், மருதமலை ஆகிய குறிப்பிடத்தக்க படத்திலும் நடித்துள்ளார்.
நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவம்மா மைசூரில் ஆசிரியராக பணியாற்றினார். இவர் உடல் நலக்குறைவால் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், 85 வயதான இவர் இன்று காலமானார்.

