கோவில்பட்டியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 12 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி இ.எஸ்.ஐ மருத்துவமனை முன்பு அம்பேத்கர் பெரியார் மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கனியாமூர் சக்தி மேட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் சங்கரன் தலைமை தாங்கினார். கிழக்கு காவல்நிலைய துணை ஆய்வாளர் சுஜித் ஆனந்த் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதிமறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று ஆர்ப்பாட்டத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக நகரச் செயலாளர் உள்பட 12 நபர்களை அங்கிருந்து கைது செய்து அழைத்து சென்று தனியார் திருமண அடைத்தனர்

