மின் கட்டணம் உயர்வை கண்டித்து தமிழக பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக ஆர்ப்பாட்டம்
தமிழக மின் வாரியத்தின் கோரிக்கையை ஏற்று மின் கட்டணம் உயர்த்தப்பட்ட உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். இந்நிலையில், மின் கட்டண உயர்வை கண்டித்தும், அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழக பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரியில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையேற்றார். அதேபோல் திருப்பூர் தெற்கு பகுதியில் எம்.எல்.ஏ வானதி சீனிவாசனும் துாத்துக்குடி தெற்கு பகுதியில் எம்.எல்.ஏ காந்தியும், சேலம் மேற்கு பகுதியில் எம்.எல்.ஏ சரஸ்வதி ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். இதுபோல மற்ற மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

