ராமநாதபுரம் அருகே காவிரி குழாயில் தண்ணீர் வராததால் 5 கிலோ மீட்டர் வரை சென்று தண்ணீர் பிடித்து வரும் அவலநிலை உருவாகியுள்ளது.
குடிநீர் பஞ்சம்
ராமநாதபுரத்தில் பெரும்பாலான கிராமங்களில் மக்கள் குடிதண்ணீருக்காக கஷ்டப்படும் அவலநிலை பல ஆண்டுகளாகவே இருந்து வருகின்றது. திருச்சியில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தாலும் இன்னும் மக்களின் குடிதண்ணீர் பிரச்சனை முழுமையாக தீர்ந்தபாடு இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், ஆர்.எஸ். மங்கலம் அருகே உள்ள சோழந்தூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடிதண்ணீருக்காக அருகில் உள்ள வடவயல் அல்லது களக்குடிக்கு 5 கிலோமீட்டர் தூரத்திற்கு இருசக்கர வாகனகளில் சென்று குடிதண்ணீர் எடுத்து வரும் அவலநில உருவாகியுள்ளது. இதுகுறித்து சோழந்தூர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் கூறும்போது, ‘சோழந்தூர் பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் தண்ணீர் சரியாக வரவில்லை என அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுப்பதில்லை. மேலும், குடிதண்ணீருகாக தினமும் அலைந்து கஷ்டப்பட்டு அவலநிலை என்று தான் எங்களுக்கு தீருமோ என்ற கவலை தான் தினமும் உள்ளது என அந்த மக்கள் கூறியுள்ளன.

