ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத அளவிற்கு வெப்ப அலையால் மக்கள் அதிகமாக பாதிக்கத்துள்ளன.
ஐரோப்பாவில் வெப்ப அலை
ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத அளவிற்கு வெப்ப அலையால் மக்கள் பெருமளவில் பாதித்துள்ளன. இந்நிலையில், கடும் வெப்ப நிலை காரணமாக நாட்டின் அத்தியாவசிய உள்கட்டமைப்புகள் உருக்குலைந்து காணப்படுகின்றனர். அதன் படங்களை மக்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இங்கிலாந்தில் கடும் வெப்பத்தால் உருகிய ரயில்வே சிக்னலின் புகைப்படம் ஒன்றை அந்நாட்டின் ரயில்வே துறை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது. இது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள் மற்றும் சிக்னல் கம்பங்கள் சேதமடைந்ததால் இங்கிலாந்து முழுவதும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மீண்டும் ரயில்கள் இயக்கப்படுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று ட்விட்டரில் ரயில்வே நிறுவனம் ரயில் பயணிகளுக்குத் தெரிவித்துள்ளது. அங்கே வெப்பநிலை 40 செல்சியஸ்க்கு மேல் பதிவானதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். தீவிர காலநிலை மாற்றம் காரணமாக வனப்பகுதிகளில் காட்டுத்தீயும் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது.

